தாய்லாந்து இளவரசியை சந்தித்தார் மைத்திரி! இலங்கைக்கு வருமாறும் அழைப்பு விடுத்தார்!! – 

290

தாய்லாந்துக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று தாய்லாந்து சிரா பத்தும் மாளிகையில் அந்நாட்டின் இளவரசி சக்ரி சிரிண்டோவைச் சந்தித்துக் கலந்துரையாடினார். ஜனாதிபதியை வரவேற்ற இளவரசி சிரிண்டோன், தாம் இலங்கைக்கு வருகை தந்திருந்த சந்தர்ப்பங்களில் இலங்கை சிறந்த விருந்தோம்பலைக்கொண்ட ஒரு நாடு என்பதை கண்டுகொண்டதாகத் தெரிவித்தார். தாய்லாந்துக்கு விஜயம் செய்வதற்காக தமக்கு அழைப்பு விடுத்தமைக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி, இங்கு வருகை தந்தபோது தாய்லாந்து அரசு உட்பட மக்களின் பெருவரவேற்பு தொடர்பில் தாம் மகிழ்ச்சியடைவதாகக் குறிப்பிட்டதோடு, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கைக்கு விஜயம் செய்யுமாறும் அவருக்கு அழைப்புவிடுத்தார்

SHARE