தாய்வான் ரயில் விபத்து!

119

தாய்வான் ரயில் தடம்புரண்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களை அந்நாட்டு ஜனாதிபதி டிசை இன்ங் வென் இன்று (திங்கட்கிழமை) சந்தித்துள்ளார்.

வடகிழக்குத்தாய்வானில் நேற்றைய தினம் ரயில் தடம்புரண்டு இடம்பெற்ற பாரிய விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளதுடன் 175 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர்.

கடந்த மூன்று தசாப்தங்களில் இடம்பெற்ற பாரிய அனர்த்தம் இதுவெனக் குறிப்பிடப்படுகிறது.

குறித்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் கூடியிருக்கும் இலன் நகரத்திற்கு அந்நாட்டு ஜனாதிபதி டிசை இன்ங் வென் விஜயம் செய்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சந்தித்துள்ளார்.

சுற்றுலாப் பயணிகள் அதிகம் உலாவும் குறித்த பிரதேசத்தில் ரயிலின் நான்கு பெட்டிகளும் இழுவைக்கு உட்பட்டு தரையுடன் தேய்வடைந்த பாதையில் நிறுத்தப்பட்ட 8 கார்களின் மீதும் மோதியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஆயிரக்கணக்கான மீட்புப் பணியாளர்கள், இராணுவ வீரர்கள் மீட்புப்பணியில் ஈடுபட்டு விபத்துக்குள்ளான ரயிலில் சிக்கியவர்களை மீட்டெடுத்து வைத்தியசாலையில் உடனடியாக அனுமதித்துள்ளனர்.

குறித்த ரயில் விபத்தை ஒத்த விபத்தொன்று கடந்த 1981 ஆம் ஆண்டு வடதாய்வானில் இடம்பெற்று 30 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE