நயன்தாரா நடிப்பில் இந்த வருடம் ‘மாயா’, ‘தனி ஒருவன்’, ‘நானும் ரவுடிதான்’ ஆகிய படங்கள் வெளியானது. இப்படங்கள் வரிசையாக வெற்றி பெற்றன. இதனால் ஹாட்ரிக் நாயகி என்ற அந்தஸ்தை பெற்றிருக்கிறார்.
இதில் ‘மாயா’ திகில் படம். நாயகிக்கு முக்கியத்துவம் கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்தில் நயன்தாராவின் நடிப்பு அதிகம் பேசப்பட்டது. தற்போது அது போல் ஒரு திகில் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் நயன்தாரா. இப்படத்தை ‘களவாணி’, ‘வாகை சூடவா’, ‘நய்யாண்டி’, ‘சண்டி வீரன்’ படங்களை இயக்கிய சற்குணம் தயாரிக்கிறார். இவரின் உதவியாளர் தாஸ் ராமசாமி இயக்கவுள்ளார். விரைவில் இப்படம் குறித்த முழுவிவரங்கள் வெளியிட உள்ளனர்.
நயன்தாரா நடிப்பில் ‘திருநாள்’, ‘இது நம்ம ஆளு’ படங்கள் விரைவில் வெளியாகவுள்ளது