திடீரென சரிந்து விழுந்த மாஸ்கோவின் கோர்கி பூங்காவில் உள்ள பாதசாரி பாலம்

172

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மாஸ்கோவின் கோர்கி பூங்காவில் உள்ள பாதசாரி பாலம் திடீரென சரிந்து விழுந்ததில் 13 பேர் காயமடைந்துள்ளனர்.

ரஷ்யாவின் மாஸ்கோவில் உள்ள புகழ்பெற்ற கோர்கி பூங்காவில் உள்ள பாதசாரி பாலத்தில், புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஏராளமான பொதுமக்கள் குழுமியிருந்தனர்.

அதில் நின்றபடியே வாணவேடிக்கைகளை கண்டு ரசித்து கொண்டிருந்தனர்.

2019ம் ஆண்டு பிறந்து 19 வினாடிகளே ஆகியிருந்த நிலையில், திடீரென யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், பாலம் சரிந்து விழுந்தது.

இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து பேசியுள்ள அதிபர் விளாடிமிர் புதினின் நெருங்கிய நண்பரான மாஸ்கோ மேயர் செர்ஜி சோபியான், நான் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்தேன். அதிஷ்டவசமாக விபத்தில் சிக்கியவர்களில் 13 பேருக்கு லேசான காயங்கள் மட்டுமே ஏற்பட்டிருந்தது.

இதுதொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், பூங்காவின் இயக்குனரான 36 வயது மெரினா லுல்சாக் பணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுளார் என தெரிவித்துள்ளார்.

SHARE