திடீரென தீப்பிடித்து எரிந்த விமானம்! பயணிகளின் திக் திக் நிமிடங்கள்!

217

விமான நிலையத்தின் ஓடுபாதையிலிருந்து கிளம்பும் சமயத்தில் விமானம் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததில் இரண்டு பேர் படுகாயமடைந்தனர்.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் ஒர்லாண்டோ சர்வதேச விமான நிலையம் உள்ளது.

அங்கிருந்து Aer Lingus ரக விமானம் அயர்லாந்தில் உள்ள டுப்ளின் விமான நிலையத்துக்கு கிளம்ப தயாராக இருந்தது.

அப்போது விமானத்தின் அடி பகுதியில் உபகரணங்கள் வைக்கும் இடத்தில் திடீரென தீப்பிடித்தது.

அந்த தீயானது மளமளவென பரவ தொடங்கியதால், விமானத்தில் உள்ளே இருந்த 193 பயணிகள் செய்வதறியாது திகைத்து பின்னர் ஒருவர் பின்னர் ஒருவர் கீழே இறங்கினர்.

பதட்டத்தில் Kevin Charles என்னும் பயணி விமானத்தில் இருந்து தப்பிக்க கீழே குதித்துள்ளார், அதில் அவரின் ஒரு கால் உடைந்தது.

அதே போல Alexix Salgado என்னும் பயணி உடலில் தீ பற்றி கொள்ள படுகாயம் அடைந்தார், இருவரும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்கள்.

மற்ற பயணிகள் அருகில் இருந்த ஹொட்டலில் தங்கவைக்கபட்டு பின்னர் வேறு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

SHARE