திடீர் சுற்றிவளைப்பில் சிக்கியது பாவனைக்கு உதவாத உணவுப்பொருட்கள்!

285

 

கோறளைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் வர்த்தக நிலையங்களை பரிசோதிக்கும் மாதாந்த செயற்திட்டத்தின் கீழ்  நடாத்திய பரசோதனையின் போது, எட்டு வர்த்தக நிலையங்களில் இருந்து பாவனைக்குதவாத பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கோறளைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவில் வாழைச்சேனை பிரதேசத்தில் உள்ள சில்லரைக்கடைகள், உணவகங்கள் என்பன இன்று சுகாதார வைத்திய பரிசோதகர்களால் பரிசோதனை செய்யப்பட்டது.

இதன் போது எட்டு வர்த்த நிலையங்களில் இருந்து பாவனைக்கு உதவாததும், காலாவதியானதுமான 729 குடிபாணம், கேக், பிஸ்கட், மிக்ஸர், டொபி என்பன கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டதாக மேற்பார்வை சுகாதார பரிசோதகர் ஆர்.நிதிராஜ் தெரிவித்தார்.

பாவனைக்குதவாத பொ
ருட்களை விற்பனைக்கு வைத்திருந்த வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் காலங்களில் இந்த பிரதேசத்தில் இவ்வாறான பொருட்களை வைத்திருப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

SHARE