அரியலூர் மாவட்டம் அருகே ஓடும் பேருந்தில் டிரைவர் உயிர் பிரியும் நேரத்திலும் சாதூர்யமாக 50 பயணிகளின் உயிரை காப்பாற்றியுள்ள சம்பவம் நடந்துள்ளது.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு பேருந்து டிரைவர் கணேசன் (47) அரியலூர் அரசு போக்குவரத்து கழக டெப்போவில் பணியாற்றிக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் நேற்றுக் அரியலுார் மாவட்டம், கீழப்பழுவூர் அருகே காலை 10 மணியளவில் பேருந்து வந்து கொண்டிருந்த போது கணேசனுக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
தான் உயிர் பிரியப் போவதை உணர்ந்த கணேசன் பேருந்தை சாலை ஓரமாக நிறுத்தி விட்டு பேருந்து ஸ்டேரிங் (Steering) சாய்ந்தபடி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் பயணிகள் மத்தியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் கண்ணீர் வடித்தவாறே இறங்கியுள்ளனர்.
இதே போல, மற்றொரு அரசு பேருந்து டிரைவர் ரமேஷ் (52) என்பவர் கோவையிலிருந்து மேட்டுப்பாளையத்திற்கு பேருந்தை ஓட்டிச் சென்றுள்ளார்.
பேருந்து கருர் மாவட்டம் தென்னிலை அருகே சென்று கொண்டிருந்த பொழுது ரமேஷ் திடீரென்று மயக்கம் வருவது போல் இருக்கிறது என்று கூறி பேருந்தினை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு டீ குடிப்பதற்காக அங்கிருந்த ஒரு டீ கடைக்குச் சென்றுள்ளார்.
அப்போது திடீரென்று எதிர்பாராத விதமாக மயங்கி விழுந்துள்ளார். உடனே நடத்துனர் ஓடிச்சென்று அவரை தூக்க பயணிகள் 108 அவசர ஊர்திக்கு அழைப்பு விடுத்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
ஆனால் ரமேஷ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் பயணிகளிடையே பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.