திடீர் விபத்துக்களின் எண்ணிக்கை உயர்வு

652
கடந்த ஆண்டினை காட்டிலும் இந்த ஆண்டு திடீர் விபத்துக்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. புத்தாண்டு காலத்தில் கடந்த ஆண்டை விடவும் இந்த ஆண்டில் அதிகளவான விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் திடீர் விபத்து காரணமாக சிகிச்சை பெற்றுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 20 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது என வைத்தியசாலையின் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இதன்படி கடந்த 30 மற்றும் 31ம் திகதிகளில் திடீர் விபத்துக்கள் காரணமாக காயமடைந்த 551 சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டதாகவும் கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 531 ஆக காணப்பட்டது எனவும் தெரிவித்துள்ளார். 31ம் திகதி நள்ளிர முதல் 1ம் திகதி காலை 7.00 மண வரையிலான காலப்பகுதியில் பல்வேறு விபத்துக்கள் காரணமாக 68 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். வீதி விபத்து, வீட்டு வன்முறை மற்றும் பட்டாசு வெடித்தல் போன்ற காரணிகளினால் அதிகளவானவர்கள் விபத்துக்குள்ளாகியுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

 

SHARE