தினமும் சப்பாத்தி சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா?

322

சப்பாத்தி எனப்படுவது ரொட்டி வகையைச் சேர்ந்த உணவாகும்.

மைதா சாப்பிடுவதை விட, கோதுமை சாப்பிட்டால் தான் நல்லது என்று முன்னோர்கள் கூறுவார்கள்.

சப்பாத்தி இன்று பல வீடுகளில் கட்டாய இரவு உணவாக மாறியிருக்கிறது. ஏனெனில் சப்பாத்தி பலவித நோய்களுக்கு மருந்தாக பயன்படுகின்றது.

குறிப்பாக இதில் நம் உடலுக்கு அதிமுக்கியம் தேவையான வைட்டமின் B,E, மினர்ல்கள் ,காப்பர் ஸிங்க், ஐயோடின் ,சிலிகான் ,பொட்டாசியம் மற்றும் கால்சியம், மற்றும் இதர மினரல் உப்புகள் கோதுமை மாவில் அடங்கியிருக்கின்றன.

அந்தவகையில் சப்பாத்தி சாப்பிடுவதனால் ஏற்படும் பயன்கள் என்ன என்பதை பார்ப்போம்.

  • சப்பாத்தியில் உள்ள ஸிங்க மற்றும் இதர மினரல் சத்துகள் சருமத்திற்கு பளபளப்பை அளிக்கும். உடல் ஆரோக்கியம் பெறும் போது சருமம் ஆரோக்கியம் பெறும். ஆற்றல் சத்து நிறைந்தது.
  • நீரிழிவு நோய், இரத்தக் கொதிப்பு போன்ற நாள்பட்ட வியாதிகளால் அவஸ்தைப்படுவோருக்கு சப்பாத்திதான் சிறந்த டயட் ஆகும். இது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதால் நோய்த் தொற்றுகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளும்.
  • உடலுக்கு ஹீமோகுளோபினை அளிப்பது இருப்புச்சத்து தான். அது சப்பாத்தியில் அதிகமாக இருப்பதாக உடலுக்குத் தேவையான ஹீமோகுளோபின் அளவை குறையாதவாறுப் பராமரிக்கும்.
  • இது மற்ற உணவுகளோடு ஒப்பிடுகையில் கலோரி மிக மிகக் குறைவு. இதனால் உடல் எடையைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள நினைப்போர் சப்பாத்தியை உண்ணலாம்.
  • கார்போ ஹைட்ரேட் முழு கோதுமையில் மொத்தமாக நிறைந்துள்ளது. இதனால் ஒரு நாள் முழுவதும் ஆற்றல் சக்தியை உடலுக்கு அளித்து சுறுசுறுப்பும் அளிக்கின்றது. மூளையின் செயல்திறனும் அதிகரிக்கின்றது.
SHARE