தினமும் செய்யும் இந்த விடயங்கள் உங்கள் உடலை பாதிப்பது தெரியுமா?

169

நாம் தினமும் மேற்கொள்ளும் சில விடயங்கள் நமக்கே தெரியாமல் நமது உடலை பாதிக்கும், அதை மாற்றி கொண்டால் ஆரோக்கிய கோளாறுகள் ஏற்படுவதிலிருந்து தப்பிக்க முடியும்.

தரமில்லாத கண்ணாடிகள்

வெயிலின் தாக்கம் கண்ணில் படாமல் இருக்க வாகனங்களில் செல்லும் பெரும்பாலானோர் சன் கிளாஸ் அணிகிறார்கள்.

சன் கிளாஸ் அணிவதால் சூரியனின் புற ஊதா கதிர்கள் நம் கண்களை பாதிப்பதில்லை என்பது உண்மை.

ஆனால் தரமான கண்ணாடிகளை அணிவது அவசியமாகும். தரமில்லாத கண்ணாடிகளை அணிந்தால் அவை நம் கண்களின் விழித்திரையை எரிச்சல் அடைய வைக்கிறது.

புற ஊதா கதிர்கள் இத்தகைய கண்ணாடிகள் மூலம் அதிகம் உறிஞ்சப்படுவதால் கண் புரை மற்றும் கண் புற்று நோய் வர வாய்ப்புகள் உண்டு.

உட்காரும் நிலை

வேலை நேரத்தில் கணினியின் முன்னால் உட்காரும் போது முதுகு தண்டின் பாதுகாப்பிற்கு ஏற்றமாதிரி நாற்காலிகளை சரி செய்ய வேண்டும்.

கால்களை இட வலமாக மாற்றி உட்காராமல் நேராக வைக்க வேண்டும், இதன் மூலம் இரத்த ஓட்டம் சீராகும்.

குப்புறப் படுப்பது

பலர் குப்புற படுத்து உறங்குவதை செளகர்யமாக நினைப்பார்கள். ஆனால் இப்படி படுப்பதால் முதுகு வலி மற்றும் நுரையீரல் நோய்கள் வர வாய்ப்புகள் உள்ளதோடு, காலப்போக்கில் நரம்புகள் சேதம் அடையலாம்.

தண்ணீர் அதிகமாக குடிப்பது

தண்ணீர் அதிகளவில் குடிப்பது உடலுக்கு நல்லது தான் என்றாலும், அதிகம் உடலுக்கு வேலை தருபவர்கள், விளையாட்டு வீரர்கள் அதிகம் குடிக்கலாம்.

ஆனால், சிறுநீர் பாதிப்பு மற்றும் இதய கோளாறுகள் உள்ளவர்கள் தண்ணீர் குறைவாக குடிப்பது நலம் பெயர்க்கும்.

பணியிடத்தில் சாப்பிடுவது

பணி செய்யும் இடங்களில் உணவை வைத்து சாப்பிடவே கூடாது. பணி இடங்களில் பாக்டீரியாக்கள் அதிகம் உற்பத்தியாவதால் உணவு செரிமானம் பாதிக்கப்படும்.

இதனால் உணவு உண்ண ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர்ந்து தான் சாப்பிட வேண்டும்.

SHARE