ஒவ்வொரு நாளும் உடலுக்கு ஆரோக்கியமான சூப்பை காலையில் குடித்து வருவதால், உடலில் ஏற்படும் அற்புத மாற்றங்கள் இதோ!
ஞாயிற்று கிழமை
ஞாயிற்றுக் கிழமை அன்று மணத்தக்காளி சூப் வைத்து குடியுங்கள். இதனால் வாய்ப்புண், வயிற்றுப் புண் மற்றும் வயிற்று வலி போன்ற பிரச்சனைகள் குணமாகும்.
திங்கள் கிழமை
திங்கள் கிழமை முடக்கத்தான் சூப் வைத்து சாப்பிடுங்கள். இந்த சூப் சாப்பிடுவதால், வாத நோய்கள், கை, கால், மூட்டுவலி, நாள்பட்ட இருமல், மார்புநோய் , வீக்கம், ஆஸ்துமா, காசநோய், தலைவலி, மஞ்சள்காமாலை, கழுத்து வலி போன்ற அனைத்து பிரச்சனைகளும் குணமாகும்.
செவ்வாய் கிழமை
செவ்வாய் கிழமை வெள்ளை முள்ளங்கி சூப் வைத்து சாப்பிடுங்கள். இந்த சூப் சாப்பிடுவதால், வயிற்றுப் புண், வயிற்று எரிச்சல், சிறுநீரக கோளாறுகள், இருமல் ,கல்லடைப்பு, போன்ற பிரச்சனைகள் வராது.
புதன்கிழமை
புதன் கிழமை சிறு கீரை சூப் வைத்து சாப்பிடுங்கள். இதனால் கண் நோய்கள், புண்கள், சிறுநீர் எரிச்சல், வீக்கம், பித்தநோய் போன்ற பிரச்சனைகள் குணமாகுவதுடன், உடல் வலிமை பெறும்.
வியாழன் கிழமை
வியாழன் கிழமை அகத்தி கீரை சூப் வைத்து சாப்பிட்டால், உடல் சூடு தணியும், பித்தம் குறையும், சைனஸ் பிரச்சனைகள் வராமல் தடுக்கப்படும்.
வெள்ளிக் கிழமை
வெள்ளிக் கிழமை முட்டைகோஸ் சூப் வைத்து சாப்பிடுங்கள். இந்த சூப் சாப்பிடுவதால், வயிற்றுப் புண், வயிற்று வலி குணமாகுவதுடன், உடலில் இரும்புச்சத்து அதிகரிக்கும்.
சனிக்கிழமை
சனிக்கிழமை வாழைத்தண்டு சூப் வைத்து சாப்பிடுங்கள். இதனால் சிறுநீர் கோளாறுகளை போக்கி, சிறுநீரகக் கற்கள் வராமல் தடுத்து, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும்.
குறிப்பு
சூப் செய்யும் போது, வெங்காயம் , பூண்டு, சீரகம், பெருஞ்சீரகம், மிளகு, வெந்தயம், கறிவேப்பிலை, மல்லிக்கீரை, சிறிதளவு உப்பு ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
மேலும் சூப்பில் வெங்காயம் மற்றும் பூண்டுகளை லேசாக நச்சுப் போடுவது மிகவும் சிறந்தது.