திலீபனின் மற்றுமொரு ஊர்திப் பவனி ஆரம்பமாகியுள்ளது.
குறித்த ஊர்திப் பவனி யாழ்ப்பாணம் – தென்மராட்சி, கொடிகாமம் பகுதியில் இருந்து இன்று (24.09.2023) காலை ஆரம்பமாகியுள்ளது.
ஊர்திப்பவனி
இந்த ஊர்திப் பவனி கொடிகாமத்திலிருந்து சாவகச்சேரி, பூநகரி, முழங்காவில், மன்னார், வவுனியா ஊடாகப் பயணித்து கிளிநொச்சியை வந்தடைந்து, நாளைமறுதினம்(26.09.2023) யாழ். நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தை வந்தடையவுள்ளது.
தாயக தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் ஏற்பாட்டில் இந்த ஊர்திப் பவனி முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.