திராட்சை விதைகளில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடண்டுகள் மற்றும் தாவர வகை உட்பொருட்களான OPCs உள்ளன.
இந்த OPCs உடலில் உள்ள ப்ரீ ராடிக்கல்களை அழிக்க உதவுவதோடு, இளமையிலேயே முதுமைத் தோற்றம் பெறுவதைத் தடுக்கும் மற்றும் குறிப்பிட்ட நாள்பட்ட நோய்களின் அபாயத்தையும் தடுக்கும்.
திராட்சை விதையின் சாறு இதயம், ரத்த நாள பிரச்சனைகள், பெருந்தமனி தடிப்பு, உயர் கொலஸ்டரால், உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றையும் சரி செய்ய உதவும்.
இந்த விதைகள் உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதர இதய பிரச்சனைகளின் தாக்கமும் குறையும். மேலும் திராட்சை விதைகளில் உள்ள உட்பொருட்கள், உடலில் விட்டமின் சி-யின் செயல்பாட்டை தூண்டிவிட்டு, கொலாஜன் உற்பத்தியை மேம்படுத்தும். அத்துடன் ரத்த நாளங்களில் உள்ள பாதிப்பையும் சரிசெய்யும்.
திராட்சை விதைகளில் ப்ளேவோனாய்டுகள், உடலில் வைட்டமின் சி-யைத் தூண்டிவிடும். மேலும், திராட்சை விதையில் விட்டமின் ஈ சத்து உள்ளதால், நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்த உதவும்.
நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்பவர்கள், அன்றாடம் திராட்சையை விதையுடன் சாப்பிட்டு வந்தால், அது கால்களில் உண்டாகும் வீக்கத்தைத தடுக்கும். இப்படி உடலில் அதிகமாக தேங்கும் திரவம் வலிமிக்கதாக இருக்கும். இதனையும் திராட்சை விதைகளைக் கொண்டு குறைக்கலாம்.
திராட்சை விதைகள் உடலில் உள்ள கொழுப்புகளை குறைக்க உதவுவதோடு, உடலின் ஆற்றலையும் மேம்படுத்தும். இதன் மூலம் உடல் எடை வேகமாக குறையும்.
உடலில் உள்ள நல்ல கொலஸ்ட்ரால் மற்றும் கெட்ட கொலஸ்ட்ராலை சமநிலையில் வைக்க திராட்சை விதைகள் உதகின்றன.
இதன் விளைவாக தமனிகள் மற்றும் ரத்த நாளங்களில் கொழுப்புகள் படிந்து ஏற்படும் அபாயம் குறைந்து, மாரடைப்பு, பக்கவாதம், கரோனரி இதய நோய்களின் அபாயமும் குறையும்.
திராட்சை விதைகளை சாப்பிடுவதன் மூலம் அல்சைமர் நோய் மற்றும் நரம்பு சிதைவு நோயின் அபாயம் குறைக்கப்படும். மேலும், இதனை சாப்பிடுவதன் மூலம் நினைவாற்றல், நல்ல மனநிலை போன்றவை மேம்படும்.
சரும புற்றுநோய், சருமத்தில் கட்டிகள் உருவாகி வளர்ச்சி அடைவதை தடுக்க மற்றும் மார்பக புற்றுநோய் ஆகியவற்றை சரி செய்ய திராட்சை விதைகள் பயன்படும்.
நுரையீரலில் ஏற்படும் தொற்றுகள், அலர்ஜியை எதிர்த்து போராட மற்றும் சளி, காய்ச்சல் போன்றவற்றின் அபாயத்தை குறைக்கவும் திராட்சை விதைகள் உதவுகின்றன. சுவாச மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் திராட்சை விதைகள் உதவுகின்றன.
திராட்சை விதைகளில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி-பாக்டீரியா பண்புகள், நுண்ணுயிர்களின் வளர்ச்சியைத் தடுத்து, பல்வேறு வகையான தொற்றுக்களை தடுக்கும். அத்துடன் சிறுநீரக பாதை தொற்றுக்களின் தீவிரத்தைக் குறைக்கவும் உதவும்.
திராட்சை விதைகளை நற்பதமான பழங்களை சாப்பிடும் போதோ அல்லது திராட்சை விதையின் சாறு அல்லது கேப்ஸ்யூல் போன்ற வடிவிலோ உட்கொள்ளலாம். அல்லது திராட்சை விதையின் சாற்றினை ஸ்மூத்தி, சூப், காக்டெயில் போன்றவற்றுடன் சேர்த்து உட்கொள்ளலாம்.