திரிஷாவை திகைக்க வைத்த அந்த ஒரு நிமிடம்!

177

திரிஷா தமிழ் சினிமாவில் நயன்தாராவுக்கு இணையாக இருந்தவர். அடுத்தடுத்து அஜித், விஜய் போன்ற முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்துவிட்டார். தற்போது ரஜினியுடன் முதன் முதலாக இணைந்து நடிக்கிறார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் பேட்ட படத்தில் அவர் நடிக்கிறார். இதனால் எதிர்பார்ப்பு சற்று கூடுதல் தான். அவரின் நடிப்பில் அண்மையில் வெளியான 96 படம் நல்ல வரவேற்பையும் வசூலையும் அள்ளியது.

இப்படத்தில் அவரின் மஞ்சள் கலர் சுடிதார் காஸ்ட்யூம் தற்போது ட்ரெண்டாகிவிட்டது. தீபாவளி ஸ்பெஷலாக அந்த சுடிதார்கள் பல கடைகளில் விற்பனைக்கு குவிந்துள்ளது.

இதை பலரும் விரும்பி வாங்கி செல்கிறார்கள். இதை திரிஷாவும் தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

SHARE