கிளிநொச்சி மாவட்டக் கரப்பந்தாட்டச் சங்கத்தால் நடத்தப்பட்ட அரச தலைவர் தங்கக் கிண்ணத்துக் கான கரப்பந்தாட்டத் தொடரில் பெண்களுக்கான திறந்த பிரிவில் திருநகர் விளையாட்டுக் கழக அணி சம்பியனானது.
கிளிநொச்சி தேசிய இளைஞர் சேவைகள் மன்ற கரப்பந்தாட்டத் திடலில் இடம்பெற்ற இந்த இறுதியாட்டத்தில் திருநகர் விளையாட் டுக் கழக அணியை எதிர்த்து குறிஞ்சி விளையாட்டுக் கழக அணி மோதியது.
இதில் 2:0 என்ற செற் கணக்கில் குறிஞ்சி விளையாட்டுக் கழக அணியை வீழ்த்தி திருநகர் விளையாட் டுக் கழக அணி வெற்றிபெற்றது.