திருகோணமலையின் இன்றைய நிலை!

230

நாட்டில் பல பாகங்களிலும் கடுமையான வரட்சி நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக திருகோணமலை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் கடுமையான வரட்சி நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பொலன்னறுவையில் ஏற்பட்டுள்ள கடுமையான வரட்சியான காலநிலையை தொடர்ந்து தற்போது வரையில் நீர் நிலைகளின் நீர் மட்டம் வெகுவாக குறைவடைந்துள்ளது.

625-0-560-320-160-600-053-800-668-160-90-2

5000 அடி நீர் மட்டம் காணப்பட்ட வெலிகந்த கரபொல ஏரியின் நீர் மட்டம் தற்போது வரட்சியின் காரணமாக வெகுவாக குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் குறித்த பகுதியில் 6 அடி நீர் நிறைந்து காணப்பட்ட இடத்தில் நீர் வற்றியுள்ளமையினை காண முடிந்துள்ளதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

625-0-560-320-160-600-053-800-668-160-90-3

இந்நிலையில், 4908 குடும்பங்களைச்சேர்ந்த 16201 பேர் இவ்வாறு வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

பொலன்னறுவை, வெலிகந்த பிரதேசம் வரட்சியால் கடும் பாதிக்கப்புகளை எதிர்நோக்கியுள்ளது. அப்பிரதேசத்தில் 4096 குடும்பங்களைச் சேர்ந்த 13302 பேர் வரட்சியால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

625-0-560-320-160-600-053-800-668-160-90-4

 

SHARE