திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இ.போ.ச விபத்து – பலர் காயம்

245

திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இ.போ.ச பஸ் விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

இன்று அதிகாலை 5.00 மணிக்கு திருகோணமலை கன்னியா என்னும் இடத்தில் விபத்துக்கு உள்ளாகி உள்ளது.

நிறைந்த பயணிகளுடன் பயணித்த பஸ், வீதியில் உள்ள வளைவுப் பகுதி ஒன்றில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதியை விட்டு விலகி குடைசாய்ந்துள்ளது

விபத்தில் 7 பேர் காயங்களுக்கு உள்ளான நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

625-0-560-320-160-600-053-800-668-160-90-1 625-0-560-320-160-600-053-800-668-160-90

 

SHARE