திருகோணமலையில் சிறுவனும் சிறுமியும் மாயம்!

251

tamildailynews_252300500870

திருகோணமலை – உப்புவெளி, மஹிந்தபுரம் பகுதியில் வசிக்கும் இரண்டு சிறுவர்களை காணவில்லை என்று முறையிடப்பட்டுள்ளது.

11 வயதான சிறுவனையும் அவருடைய தங்கையான 09 வயதான சிறுமியுமே காணாமல் போயுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை பிரத்தியேக வகுப்பு ஒன்றுக்கு செல்வதாக கூறிச்சென்றவர்கள் இரவாகியும் வீடு திரும்பவில்லை எனவும், இதனையடுத்து பெற்றோர் உப்புவெளி பொலிஸில் முறையிட்டுள்ளனர்.

இந்த நிலையில் பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், சிறுவர்கள் காணாமல் போனது தொடர்பில் ஐந்து பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

SHARE