திருகோணமலையை வந்தடைந்த மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன்

207

யாழ். மேல் நீதிமன்றத்தில் இருந்து திருகோணமலை மாவட்ட மேல் நீதிமன்றத்திற்கு மாற்றம் பெற்றுச் சென்றுள்ள மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருகோணமலைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

 

 

மேல் நீதிமன்ற நீதிபதிகளின் வரலாற்றிலும், திருகோணமலைக்கு தமிழ் தலைவர் ஒருவர் வரலாறு காணாத அதியுச்ச பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டமை இதுவே முதல் தடவையாகும்.

விசேட பொலிஸ் அதிகாரிகளின் பாதுகாப்புடனும், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியிலும் நீதிபதி இளஞ்செழியன் திருகோணமலையை வந்தடைந்துள்ளார்.

மேலும், மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் தங்கும் விடுதிக்கும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் அதியுச்ச பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொடர்ச்சியாக மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனிற்கு விசேட பாதுகாப்பினை வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், திருகோணமலை மாவட்டத்திற்கு பொறுப்பான பொலிஸ் பொறுப்பதிகாரி இன்றைய திருகோணமலை மாவட்டத்தின் மேல் நீதிமன்ற நடவடிக்கைகளை நேரடியாகச் சென்று அவதானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வழமையாக நீதிமன்ற நடவடிக்கைகளை 2ஆம் நிலை பொலிஸ் பொறுப்பதிகாரிகளே அவதானித்துவரும் நிலையில் மாவட்டத்திற்கு பொறுப்பான பொலிஸ் பொறுப்பதிகாரி இன்றைய தினம் நீதிமன்ற நடவடிக்கைகளை அவதானித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

மேலும், யாழ். மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதியாக, நீதிபதி இளஞ்செழியன் பணியாற்றுகையில் பாதுகாப்பு கடமைகளில் உடன் இருந்த மெய்பாதுகாவலர்கள் அனைவரும் திருகோணமலையிலும் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனுக்கு தொடர்ச்சியாக பாதுகாப்புக்களை வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

SHARE