திருகோணமலை உப்புவெளி பகுதியில் காணாமல் போன ஒரே குடும்பத்தை சேர்ந்த சிறுவர்கள் மீட்பு!

259

திருகோணமலை உப்புவெளி பகுதியில் இரண்டு பிள்ளைகள் காணாமற்போயுள்ளனர்.

9 வயதான சிறுமியொருவரும் 11 வயதான சிறுவனொரும் காணாமற்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலதிக வகுப்பிற்காக கண்ணியா சென்ற வேளையிலேயே நேற்று (12) மாலை இரு பிள்ளைகளும் காணாமற்போயுள்ளதாக பொலிஸில் முறைபாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், காணாமற்போன பிள்ளைகள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

625-0-560-320-160-600-053-800-668-160-90-8

எனினும் காணாமந்போயுள்ள சிறுவனால் எழுதப்பட்டது என கூறப்படும் கடிதம் ஒன்று கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதேச மக்களின் ஒத்துழைப்புடன் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு ஐந்து பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காணாமல் போன ஒரே குடும்பத்தை சேர்ந்த சிறுவர்கள் மீட்பு

திருகோணமலை, கன்னியாப் பிரதேசம் உப்புவெளிப் பகுதியில் வைத்து காணாமல் போயிருந்த 9 வயதான சிறுமியொருவரும் 11 வயதான சிறுவனொரும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் மட்டக்களப்புக்கு புகையிரதத்தில் சென்று கொண்டிருந்த போது, வாழைச்சேனையில் வைத்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE