திருகோணமலை கடற்படை முகாமை ஐக்கிய நாடுகள் அமைப்பின் அதிகாரிகள் பார்வையிட்டதில் எவ்வித தவறும் கிடையாத என அரசாங்கம் அறிவித்துள்ளது.
அமைச்சரவையின் இணைப் பேச்சாளரும், சுகாதார அமைச்சருமான டொக்டர் ராஜித சேனாரட்ன இதனைத் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை கடற்படை முகாமிற்குள் ஐக்கிய நாடுகள் அமைப்பின் அதிகாரிகள் பிரவேசித்தமை பிழை கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பும் நாமும் வேறில்லை எனவும், எம் போன்ற உறுப்பு நாடுகளைக் கொண்டே ஐக்கிய நாடுகள் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
உறுப்பு நாடுகளை பாதிக்கும் பிரச்சினைகள் குறித்து பேசுவதில் தவறில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கர்கள் இந்த முகாமிற்குள் பிரவேசித்திருந்தால் அது பிழையானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடற்படை முகாமில் சித்திரவதை கூடமொன்று இருப்பதாகவும் அதனை பார்வையிட வேண்டுமெனவும் ஐக்கிய நாடுகள் அதிகாரிகள் கோரியதாகவும் அதற்கு இடமளிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டவையே இந்த முகாம் என ஐக்கிய நாடுகள் அதிகாரிகள் புரிந்து கொண்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.