திருகோணமலை முக்கிய நாடு ஒன்றின் வசமாகிறது

494

எதிர்வரும் 15 வருடங்களுக்கு தேவையான அபிவிருத்தி திட்டங்கள், தற்போது தயாரிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.அலரிமாளிகையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் வைத்து பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.

திருகோணமலையை இலங்கை இந்தியாவின் கேந்திர நிலையமாக மாற்றுவதற்கான திட்டம் தற்போது தயாரிக்கப்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் நாட்டை முன்னேற்றுவதற்காகவே பதவியேற்றது.

தற்போது, மேல் மாகாண அபிவிருத்தி, கண்டிக்கான அதிவேக பாதை அபிவிருத்தி என்பன திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த வரிசையில் யாழ்ப்பாணம் மாத்திரமே எஞ்சியுள்ளது எனவும் அதற்கான திட்டங்களும் முன்னெடுக்கப்படும் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE