திருகோணமலை மூதூர் பனிச்சனூர் பிரதேசத்தில் விடுதலைப் புலிகள் புதைத்து வைத்திருந்த பெருந்தொகை தங்கத்தை, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர் நாமல் ராஜபக்ச எடுத்துச் சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

359

 


திருகோணமலை மூதூர் பனிச்சனூர் பிரதேசத்தில் விடுதலைப் புலிகள் புதைத்து வைத்திருந்த பெருந்தொகை தங்கத்தை, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர் நாமல் ராஜபக்ச எடுத்துச் சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

11110211_1813702138854345_7951391697032289818_n mahinda_namal


ராஜபக்ச குடும்பத்தினர் புதையல் தோண்டி அவற்றில் உள்ள பெறுமதியான பொக்கிஷங்களை கொள்ளையிட்டு வந்தனர். அத்துடன் விடுதலைப் புலிகள், பொதுமக்களிடம் இருந்து சேகரித்த தங்கத்தையும் இவர்கள் தம்வசப்படுத்திக் கொண்டனர்.
இதனை தவிர சகல சர்வதேச சட்டங்களையும் மீறி விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றிய ஆயுதங்களை சர்வதேச பயங்கரவாத குழுக்களுக்கு விற்றுள்ளதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில், நாமல் ராஜபக்சவின் தங்க கொள்ளை தொடர்பாக புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.
திருகோணமலையில் கைது செய்யப்பட்ட திவ்யா என்ற புலிகளின் உறுப்பினர் ஒருவர், திருகோணமலைக்கு பொறுப்பாக இருந்த புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரியிடம் முக்கியமான தகவல் ஒன்றை வெளியிட்டார்.
மூதூர் பனிச்சனூர் என்ற பிரதேசத்தில் 64 ஆம் மைல் கல் பிரதேசத்தில் விடுதலைப் புலிகள் 540 கிலோ கிராம் தங்கத்தை புதைத்து வைத்துள்ளதாக திவ்யா என்ற புலிகளின் உறுப்பினர் தகவல் வழங்கியுள்ளார்.
அவர் வழங்கிய இந்த தகவலை ராஜபக்சவினருக்கு ஆதரவான பொலிஸ் அதிகாரி ஒருவர், நாமல் ராஜபக்சவிடம் கூறியுள்ளார்.
தகவல் கிடைத்ததுடன் உடனடியாக செயற்பட்ட நாமல் ராஜபக்ச ஹெலிக்கொப்டர் ஒன்றின் மூலம் பனிச்சனூர் பிரதேசத்திற்கு சென்று அங்கிருந்தவர்களை விரட்டிவிட்டு, புதைக்கப்பட்டிருந்த தங்கதை எடுத்துக் கொண்டு கொழும்புக்கு சென்றுள்ளார்.
நாமல் ராஜபக்ச கொழும்புக்கு கொண்டு வந்த தங்கத்திற்கு என்ன நடந்தது என்பதை யாரும் தெரியாது. தங்கம் புதைக்கப்பட்டிருந்தாக கூறப்படும் இடத்தில் தற்போது தண்ணீர் தாங்கி ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் நாமல் ராஜபக்ச எடுத்துச் சென்ற தங்கத்தில் அப்பாவி தமிழ் யுவதிகளின் ஒரே ஒரு சோடி தோடு கூட இருந்திருக்கலாம்.
மக்களின் சொத்துக்களை இப்படி கொள்ளையிட்டவர்களே தற்போது மீண்டும் அதிகாரத்திற்கு வருவதற்கு முயற்சித்து வருகின்றனர்.
ராஜபக்ச குடும்பத்தினர் இருக்க வேண்டியது சிறைச்சாலையில் எனவும் நல்லாட்சி என்பது அயோக்கியர்களின் பூங்காவமாக மாறிவிடக் கூடாது எனவும் அந்த சிங்கள இணையத்தளம் மேலும் தெரிவித்துள்ளது.

SHARE