200 வருடங்கள் பழமையான பிள்ளையார் ஆலயமிருந்த மேற்படி சூழலை தொல்லியல் நிலமாக தொல்லியல் திணைக்களம் அடையாளபடுத்தி இருந்தது
இவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் தொல்லியல் சட்டங்களையும் மீறி பௌத்த சாசன அமைச்சு மற்றும் இராணுவத்தினர்-கடற்படை உதவியுடன் புதிய பௌத்த மத கட்டுமானங்களை நிறுவி இருக்கின்றார்கள்
இங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ள சட்டவிரோத பௌத்த விகாரைக்கு Kottiyarama Sri Pathra Dhathu Raja Maha Viharaya பெயரிட்டு இருக்கின்றார்கள்
இது மாத்திரமின்றி விகாரை சூழலில் பிரமாண்ட புத்தர் சிலை ஒன்றையும் கூட நிறுவி இருக்கின்றார்கள்
சம்பூரில் கண்டெடுக்கப்பட்ட சுடு மண் சிற்பங்கள் சம்பூரை உள்ளடக்கிய மேற்படி பிரதேசம் தமிழ் மக்களின் பல்லாயிரம் வருட பழமையான வரலாற்றுக்கு ஆதாரமாக இருக்கின்றன
ஆனால் வெறும் ஒரு சில வருடங்களில் மத்திய தொல்லியல் திணைக்களம் ஊடக ஆக்கிரமித்து பௌத்த மத நிலமாக அடையாளபடுத்தி இருக்கின்றார்கள்
குறிப்பாக இப் பகுதியில் மேற்படி விகாரையின் பயன்பாட்டுக்கென்று 300 ஏக்கர் நிலப்பகுதியும் ஆக்கிரமிக்கபட்டுள்ளது
பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா பௌத்த சாசன அமைச்சின் செயலராகவிருந்த பேராசிரியர் கபில குணவர்தன ஆகியோரின் ஒத்துழைப்புடன் இந்த ஆக்கிரமிப்புக்ளுக்கு Balalle Ratanasara என்கிற பிக்கு தலைமை தாங்குகின்றார்
2,500 வருசங்களுக்கு முன் தோன்றிய ஒரு நாகரிகத்தின் நிலப்பரப்பு எங்கள் கண் முன்னே சிதைக்கப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது
ஆனால் ரணில் விக்ரமசிங்கே எண்ணிக்கையில் சிறிய இனங்களுக்கு பாதுகாப்பானவர் என எங்களுக்கு நல்லிணக்க பாடம் நடத்துகின்றார்கள்