திருக்கோணேஸ்வரம் கோயிலில் நிஷா பிஸ்வால்

225

625.256.560.350.160.300.053.800.461.160.90 (1)

அமெரிக்காவின் மத்திய மற்றும் தெற்காசியாவுக்கான அமெரிக்காவின் பிரதி இராஜாங்க செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால் திருகோணமலைக்கு விஜயம் செய்துள்ளார்.

இன்று (14) காலை 9.45 மணியளவில் திருக்கோணேஸ்வரம் கோயிலுக்கு விஜயம் செய்ததாக அறியமுடிகின்றது.

இதன்போது திருக்கோணேஸ்வரம் கோயிலின் சிறப்பு வழிப்பாடுகளில் நிஷா பிஸ்வால் கலந்துகொண்டுள்ளார்.

மேலும், இந்த வழிபாடுகளில் கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்நாண்டோ உட்பட பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

கிழக்கு மாகாண ஆளுநருடன் நிஷா கலந்துரையாடல்

அமெரிக்காவின் மத்திய மற்றும் தெற்காசியாவுக்கான அமெரிக்காவின் பிரதி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால் மற்றும் அவரது குழுவினர் திருகோணமலைக்கு விஜயம் செய்துள்ளனர்.

திருக்கோணேஸ்வரம் கோயிலில் வழிப்பாடுகளை முடித்துக்கொண்டு, மதியம் 12.00 மணி அளவில் கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்நாண்டோவின் இல்லத்திற்கு சென்றுள்ளனர்.

அங்கு நிஷா பிஸ்வால் மற்றும் ஆளுநருடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டுள்ளனர். எனினும் குறித்த கலந்துரையாடலில் ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (1) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (2) 625.0.560.320.160.600.053.800.668.160.90

கிழக்கு மாகாண முதலமைச்சரை சந்தித்தார் நிஷா

நிஷா பிஸ்வால் மற்றும் அவரது குழுவினர் கிழக்கு ஆளுநரை சந்தித்த பின்னர் மதியம் 1.45 மணி அளவில் கிழக்கு மாகாண சபையினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த சந்திப்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், கிழக்கு மாகாண அமைச்சர்களான சி. தண்டாயுதபாணி, ஆரியவதி கலப்பத்தி, எம். நஸீர் மற்றும் துரைராஜசிங்கம் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

மேலும், கிழக்குமாகாண சபை உறுப்பினர்களுக்கும் நிஷா பிஸ்வாலுக்கும் இடையில் கலந்துரையாடலும் நடைபெற்றுள்ளது.

SHARE