திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு மாணவர்கள் கைது

228

பதுளை – எல்ல, உடுவர பகுதியிலுள்ள வியாபார நிலையமொன்றில் இடம்பெற்ற திருட்டு சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் இரண்டு பாடசாலை மாணவர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட மாணவர்கள் தரம் 11 இல் கல்வி கற்பவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மாணவர்கள் ஆயிரத்து 750 ரூபா பெறுமதியான 19 சாப்பாடு பெட்டிகள், குளிர்பாணங்கள், பிஸ்கட் பைக்கற்றுகள் மற்றும் சிகரட் போன்றவற்றை திருடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

SHARE