திருநங்கையாக மாறிய ஆண் கைதி

174

குழந்தைகளை பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில் சிறையில் இருக்கும் இரண்டு ஆண் கைதிகள் திருமணம் செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

பிரித்தானியாவின் Nottingham நகரில் உள்ள Whatton கிராமத்தில் புகழ்பெற்ற சிறைச்சாலை உள்ளது.

இங்கு Leighton Morris (29) மற்றும் Catherine Rook (29) ஆகியோர் கடந்த 2009லிருந்து கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர்.

இருவரும் குழந்தைகளை பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டு சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.

இதனிடையில் Rook திடீரென திருநங்கையாக மாறினார்.

இந்நிலையில் Morris-ம், Rook-ம் திருமணம் கொள்ள முடிவெடுத்தார்கள், ஆனால் சிறை நிர்வாகம் இதற்கு ஒத்துக் கொள்ளவில்லை.

ஆனால், விடாபிடியாக கடந்த 18 மாதங்களாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட இரண்டு கைதிகளும் இறுதியாக அதிகாரிகள் சம்மதத்துடன் சிறையிலேயே திருமணம் செய்து கொண்டார்கள்.

இருவரும் ஒரே சிறையில் இருந்த நிலையில் தற்போது அதில் ஒருவர் வேறு சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

திருமணம் செய்து கொண்ட இருவர் ஒரே சிறையில் இருக்க கூடாது என்பதற்காக அதிகாரிகள் இதை செய்துள்ளார்கள்.

இது Morris மற்றும் Rook-ஐ சோகமடைய செய்துள்ளதுடன், நாங்கள் இணைந்து இனி வாழ வாய்ப்பே இல்லை எனவும் வருத்தப்பட்டுள்ளனர்.

இதனிடையில்,கடுமையான குற்றங்களை செய்த இருவர் சிறையிலேயே திருமணம் செய்து கொண்டுள்ளது பலருக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதோடு, Morris மற்றும் Rook திருமணம் செய்து கொண்ட நிலையில் சிறையிலிருந்து வெளியில் சென்றால் குழந்தைகள் மீது இருவரும் சேர்ந்து மீண்டும் பாலியல் வன்முறையை நிகழ்த்த கூடும் எனவும் பலர் அச்சம் தெரிவித்துள்ளார்கள்.

SHARE