திருப்பதி ஆலய உண்டியல்களில் லட்சக்கணக்கான ரூபா இலங்கை நாணயக் குற்றிகள்

305

 

இந்தியாவின் பிரபல்யமான ஆலயங்களில் ஒன்றான திருப்பதி ஆலய உண்டியல்களில் லட்சக் கணக்கான ரூபா இலங்கை நாணயக் குற்றிகள் காணப்படுவதாக, திருப்தி ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தப் பணத்தை, கதிர்காம தேவாலயத்தின் அபிவிருத்திக்காக வழங்கத் தயார் என திருப்பதி ஆலய பரிபாலன சபையினர், கதிர்காம தேவாலய பஸ்நாயக்க நிலமே டி.பீ.குமாரகே தெரிவித்துள்ளார்.

சுமார் இருபது லட்ச ரூபா பெறுமதியான பணம் இவ்வாறு நாணயக் குற்றிகளாக ஆலய உண்டியல்களில் முடங்கி;க் கிடப்பதாகத் தெரிவி;க்கப்படுகிறது.

அதிகளவான நாணயக் குற்றிகள் காணப்படுவதனால் விமானம் ஊடாக நாணயக் குற்றிகளை எடுத்து வருவது சிரமமானது எனவும், இதனால் சென்னையின் ஊடாக கப்பல் வழியாக இலங்கைக்கு இந்த நாணயக் குற்றிகள் கொண்டு வரப்படவுள்ளதாக பஸ்நாயக்க நிலமே தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் பண்டைய ஆலயங்களில் மேற்கொள்ளப்படும் வழிபாட்டு முறைமைகள் மற்றும் சமூக சேவைகள் தொடர்பில் ஆராய்ந்து அதற்கு நிகரான சேவையை கதிர்காம தேவாலயத்திலும் வழங்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தமக்கு ஆலோசனை வழங்கியதாக அவர் கொழும்பு ஊடகமொன்றுக்கு குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, புத்தகாயா உள்ளிட்ட இந்தியாவில் காணப்படும் சில பௌத்த விஹாரைகளிலும் இவ்வாறு பெருமளவில் இலங்கை நாணயக் குற்றிகள் உண்டில்களில் முடங்கிக் கிடப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

SHARE