திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு காதலனுடன் சென்ற நடிகை!!

161

திருப்பதியில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் சாமி தரிசனம்

விக்னேஷ்சிவன், நயன்தாரா
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை நயன்தாரா மற்றும் அவரது காதலன் விக்னேஷ் சிவன் ஆகியோர் இன்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் இருவருக்கும் ரங்கநாதர் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்கள் வழங்கினர். கோவிலுக்கு வெளியே வந்த நயன்தாராவை பார்த்த பக்தர்கள் ஆரவாரம் செய்தனர். மேலும் சிலர் நயன்தாராவின் அருகில் சென்றனர்.
நயன்தாரா, விக்னேஷ்சிவன்
அவருடன் செல்பி எடுத்துக் கொள்ள முயற்சி செய்தனர். அவர்களை பாதுகாவலர்கள், நயன்தாரா அருகில் வரவிடாமல் தடுத்து நிறுத்தினர். இதனால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. பின்னர் பாதுகாவலர்கள், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனை பாதுகாப்பாக அழைத்து சென்று காரில் ஏற்றி வழியனுப்பி வைத்தனர்.
SHARE