தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் ஒளிபரப்பதிவாளராக பணியாற்றி இருந்தவர் கே.வி.ஆனந்த்.
குறிப்பாக ஷங்கர் இயக்கிய பிரம்மாண்ட படங்களான முதல்வன், பாய்ஸ், சிவாஜி போன்ற படங்களுக்கு இவர் தான ஒளிப்பதிவு செய்தார்.
பின் கனா கண்டேன் படத்தின் மூலம் இயக்குனரான இவர் அயன், கோ, மாற்றான், அனேகன், காப்பான் போன்ற பல்வேறு படங்களை இயக்கினார்.
தனது அடுத்த பட வேலைகளில் கே.வி.ஆனந்த் பிஸியாக இருந்த போது தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
மகளின் பேட்டி
நேற்று மறைந்த இயக்குனர் கே.வி.ஆனந்த் அவர்களின் பிறந்தநாள்.
அவரது மகள் சாதனா பேட்டி அளித்துள்ளார், அதில் அவர், அப்பாவோட ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் நானும் எனது தங்கையும் கையாலே செய்த பொருட்களை தான் கிப்டாக கொடுப்போம், ஸ்பெஷலாக கேக் செய்வேன்.
கடையில் வாங்கி கொடுப்பதை அப்பா விரும்பமாட்டார். அப்பா நினைத்திருந்தால் எங்களை சினிமாவிற்குள் கொண்டு வந்திருக்கலாம், ஆனால் அவர் எங்கள் சுதந்திரத்தில் தலையிடவில்லை. நாங்கள் விரும்பியதையே படிக்க வைத்தார், எங்களுடைய விருப்பத்திற்கு தடையாக அப்பா இருந்தது கிடையாது.
எனக்கு ஆர்க்கிடெக் படிக்கணும் என்பது ஆசை. என்னுடைய தங்கை சினேகா டாக்டராக ஆசைப்பட்டாள் . இரண்டு பேரையுமே அவரவர்கள் ஆசைப்பட்ட துறையில் சாதிக்க வைத்தார்.
முக்கியமாக திருமணத்திற்கு பிறகு நாங்கள் கணவரை சார்ந்திருக்க கூடாது, வேலைக்கு போகணும், உழைக்கணும், நீங்கள் சம்பாதிக்கணும், இண்டிபெண்டண்டா இருக்கணும் என்று சொல்லி சொல்லி வளர்த்திருக்கிறார் என எமோஷ்னலாக பேசியுள்ளார்.