திருமணத்துக்கு தயாராகும் எமி ஜாக்சன்

123

தனது திருமணத்தை நடத்துவதற்கான சிறந்த இடங்களை தெரிவு செய்யும் முயற்சியில் நடிகை எமி ஜாக்சன் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எமி ஜாக்சன், தனது காதலரான ஜார்ஜ் பானியிட்டோவுடன் இணைந்து, திருமணம் செய்துகொள்வதற்கான இடங்களை தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இவர்கள் கடற்கரை ஓரத்தில் திருமணம் செய்துகொள்ளவே விரும்புவதாகவும், அதற்காக அழகிய கடற்கரை பகுதிகளை தேடிக்கொண்டு இருப்பதாகவும் சினிமா தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் எமி ஜாக்சன், ஜார்ஜ் பானியிட்டோவுடன் மிக்கோநொஸ் தீவுக்கு அண்மையில் சுற்றுலா பயணமொன்றை மேற்கொண்டிருந்தார்.

அதன்போது, அத்தீவு எமி ஜாக்சனை வெகுவாக கவர்ந்ததாக கூறப்படுகின்றது. ஆகையால் குறித்த பகுதியில் அவரது திருமண நிகழ்வுகள் இடம்பெறுவதற்கு வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றது.

SHARE