திருமணமாகி ஒரே வருடத்தில் இறந்த கணவர்- அதில் இருந்து மீண்டு புதிய தொடரில் நடிக்க வந்த நடிகை ஸ்ருதி

112

 

தமிழ் சின்னத்திரையில் நடிக்கும் நடிகைகள் பலரும் மக்களிடம் அதிகம் பிரபலம். அவர்களின் வாழ்க்கையில் நல்ல விஷயங்கள் நடந்தால் மக்கள் கொண்டாடுவார்கள், தவறு ஏதும் நடந்தால் மக்களும் கஷ்டப்படுவார்கள்.

அப்படி கடந்த வருடம் சீரியல் நடிகை ஸ்ருதி வாழ்க்கையில் மிகவும் மோசமான சம்பவம் நடந்தது. திருமணமான ஒரே வருடத்தில் அவரது கணவர் அரவிந்த் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.

இதைக் கேள்விபட்டு ரசிகர்கள் மிகவும் வருத்தம் அடைந்தார்கள், ஆனால் அவரோ எனது கணவர் என்னுடன் தான் இருக்கிறார் என அவரே தைரியமாக மாறியுள்ளார்.

புதிய தொடர்
இந்த நிலையில் நடிகை ஸ்ருதி கணவர் இறப்பிற்கு பிறகு சில மாதங்கள் ஆனதால் தனது வேலையில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்.

அதாவது அவர் சன் தொலைக்காட்சியில் சஞ்சீவ் மற்றும் ஸ்ருதி ஜோடியாக நடிக்க புதியதாக தொடங்க இருக்கும் லட்சுமி தொடரில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

படப்பிடிப்பு தள புகைப்படங்களை வெளியிட அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.

SHARE