திருமணமான இரண்டு மாதத்தில் புதுமாப்பிள்ளைக்கு ஏற்ப்பட்ட சோகம்

171

புதுமண தம்பதிகள் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதில், கணவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தின் ஐதராபாத்தை சேர்ந்தவர் ஆதித்யகுமார் (31) இவர் சென்னையில் தங்கி தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தார்.

அதே நிறுவனத்தில் பணிபுரியும் விஜயலட்சுமி (28) என்ற பெண்ணை காதலித்து வந்த ஆதித்யகுமார் இரு வீட்டாரின் சம்மதத்தோடு கடந்த மே மாதம் அவரை திருமணம் செய்து கொண்டார்.

இதையடுத்து உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள தன் அத்தை வீட்டுக்கு விருந்துக்காக ஆதித்யகுமார், மனைவி விஜயலட்சுமி மற்றும் நண்பர் ஷியாம்தேஜாவுடன் சென்றார்.

இந்நிலையில், கடந்த 17ஆம் திகதி பைக்கில் மனைவியுடன் ஆதித்யகுமார் ஹரித்துவாரில் இருந்து டெல்லிக்கு வந்தார்.

உடன் அவர் நண்பரும் இன்னொரு பைக்கில் சென்றார்.

உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் அருகே வந்த போது மர்ம நபர்கள் ஆதித்யகுமாரை துப்பாக்கியால் சுட்டனர்.

அப்போது துப்பாக்கி தோட்டா ஆதித்யகுமார் அணிந்து இருந்த ஹெல்மெட்டின் பக்கவாட்டை துளைத்து அவரது தாடையை கிழித்துக்கொண்டு வாய் வழியாக வெளியேறியது.

இதையடுத்து மனைவியுடன் பைக்கிலிருந்து ஆதித்யகுமார் கீழே விழுந்தார். விஜயலட்சுமிக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

இதை கண்டு அதிர்ச்சியடைந்த ஷியாம்தேஜா, இருவரையும் மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் சேர்த்தார்.

பின்னர், அங்கு சிகிச்சை பலனின்றி ஆதித்யகுமார் உயிரிழந்தார். துப்பாக்கி சூடு நடத்திய நபர்கள் யார் என இன்னும் தெரியாத நிலையில், இது தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

SHARE