திருமணமான சிறிது நேரத்தில் கணவரின் தாய் கல்லறைக்கு அவரை அழைத்து சென்ற புதுப்பெண்ணின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நிக் நோர்வுட் என்பவருக்கும் ஷயானே என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயம் ஆன நிலையில், நிக்கின் தாய் உயிரிழந்தார்.
பின்னர் திருமணம் நெருங்கிய வேளையில் நிக் அவரின் தாயின் பிரிவால் வாடினார்.
இதையடுத்து நிக்குக்கும், ஷயானேவுக்கும் திருமணம் நடைபெற்றது.
திருமணமான சிறிது நேரத்தில் நிக்கின் கண்களை துணியால் கட்டிய ஷயானே அவரை சர்ப்ரைஸாக ஒரு இடத்துக்கு அழைத்து சென்றார்.
அவர்கள் செல்ல வேண்டிய இடம் வந்ததும் ஷயானே, நிக்கின் கண்களில் கட்டிய துணியை அவிழ்த்தார்.
அப்போது தான் தனது தாயின் கல்லறையில் இருப்பதை உணர்ந்து நிக் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டார்.
அவர் கூறுகையில், என் திருமணத்தின் போது தாய் உடன் இருந்தால் நன்றாக இருக்கும் என எனது ஏக்கத்தை முன்னர் ஷயானேவிடம் சொன்னேன்.
இதனால் எனக்கு தெரியாமல் இந்த விடயத்தை ஷயானே செய்தார்.
என் தாயின் உடையை தான் திருமணத்தின் போது ஷயானே அணிந்திருந்தார், அப்போது என் தாயே என்னுடன் இருப்பது போல உணர்ந்தேன்.
இது என் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் என கூறியுள்ளார்.