திருமணமான 36 மணிநேரத்தில் முடிந்த சந்தோஷம்… உருக்கமான காதல் கதை!…

315

 

எல்லாருக்குமே அவரவர் காதலிக்கும் நபரை திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசையிருக்கும். சிலருக்கு இது கைகூடும், சிலருக்கு நிராசை ஆகும். யார் ஒருவரும், தான் காதலிக்கும் நபர் இறந்துவிடுவார் என்றாலோ, திருமணம் செய்துக் கொள்ள போகும் நபர் இறந்துவிடுவார் என்றாலோ அவரை திருமணம் செய்துக் கொள்ள யோசிப்பார்கள்.

lover_wedding_004-w540 lover_wedding_005-w540

“சாகுற நாள் தெரிஞ்சுருச்சுன்ன, வாழுற நாள் நரகமாயிடும்” என்ற வசனத்தை போல தான் இது. ஆனால், இங்கு தான் 11 வருடங்களாக காதலித்த வந்த நபர் இன்னும் சற்று நேரத்தில் இறந்துவிடுவார் என தெரிந்தும் திருமணம் செய்துக் கொண்டுள்ளார் ஒரு பெண்…

ராவுல் ஹிநோஜோசா!

33 வயது நிரம்பிய ராவுல் ஹிநோஜோசாவுக்கு நாள்பட்ட லிம்ஃபோசைடிக் லுகேமியா. டெக்சாஸ் மாகணத்தில் உள்ள அமரில்லோ மருத்துவமனையில் படுக்கையில் இருந்தார் ராவுல் ஹிநோஜோசா.

கடைசி ஆசை!

மருத்துவ ஊழியர்களிடம் தனது கடைசி ஆசையாக தனது நீண்டநாள் காதலியை திருமணம் செய்துக் கொள்ள விருப்பம் தெரிவித்தார் ராவுல் ஹிநோஜோசா. இவரது ஆசைக்கு மருத்துவர்களும் ஒப்புதல் வழங்க. மருத்துவமனையிலேயே ராவுல் ஹிநோஜோசாவுக்கும் அவரது காதலி யுவொன்னே லாமஸ்-க்கும் திருமணம் நடந்தது.

விரைவு பணிகள்!

ராவுல் ஹிநோஜோசின் ஆசைப்படி திருமணத்தை உடனடியாக நடத்த. மருத்துவமனை ஊழியர்கள், நண்பர்கள், உறவினர்கள் என அனைவரும் விரைவாக பணிகளை நடத்தினர்.

நிச்சயம்!

இவர்கள் இருவருக்கும் 2007-லேயே நிச்சயம் ஆகிவிட்டது. அப்போதே அவருக்கு புற்றுநோய் இருக்கிறது என தெரிந்து தான் சம்மதித்துள்ளார் யுவொன்னே.

பேஸ்புக் லைவ்!

ராவுலின் திருமணத்தை இவரது நண்பர்கள் முகநூளில் லைவ் செய்துள்ளனர். இவர்கள் இருவரும் திருமணம் செய்துக் கொண்ட உடனே சுற்றி இருந்தவர்கள் எல்லாம் கூச்சலிட்டு வாழ்த்தினர்.

36 மணி நேரம்!

இந்த சந்தோஷம் வெகு நேரம் நீடிக்கவில்லை. திருமணமான 36 மணி நேரத்திலேயே ராவுல் இறந்துவிட்டார். ராவுலின் கடைசி ஆசை நிறைவேற வேண்டும். அவர் புன்னகையுடன் பூவுலகை அடைய வேண்டும் என்பதற்காகவே இத்திருமணம் நடந்துள்ளது.

 

SHARE