திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார் ரித்விகா!

309

இயக்குநர் பா.ரஞ்சித்தின் ‘மெட்ராஸ்’, ‘கபாலி’ உள்ளிட்ட திரைப்படங்களில்  நடித்த ரித்விகா, அடுத்த ஆண்டு திருமணம் நடைபெறவுள்ளதாக அறிவித்துள்ளார். தற்போது அவர் பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவாகும் ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில் ரித்விகா தன்னுடைய திருமணம் பற்றிய  அறிவிப்பை ஒரு திரைப்பட விழாவில் கலந்துகொண்டு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “நான் யாரோ ஒருவரை காதலித்து வருவதாகவும், இந்த வருடம் அவருக்கும் எனக்கும் திருமணம் நடக்கும் என்றும் சினிமா வட்டாரத்தில் தகவல் பரவியிருக்கிறது. ஆனால் நான் இந்த வருடம் திருமணம் செய்துகொள்ளப்போவதில்லை. என் திருமணம் அடுத்த ஆண்டு நடைபெறும்.

திருமணத்திற்கு பின் நடிப்பதா வேண்டாமா என்பதை என் கணவர் தான் முடிவு செய்வார்” என்று கூறியிருக்கிறார்.

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பொஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரித்விகா, பிக்பொஸ் டைட்டிலை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

SHARE