திருமணம் செய்ய இருக்கும் நபரின் புகைப்படத்தை வெளியிட்ட ரிச்சா கங்கோபாத்யாய்

574

மயக்கம் என்ன படம் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ரிச்சா கங்கோபாத்யாய். செல்வராகவன் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ரிச்சா நடித்திருந்தார். அதன்பின் சிம்பு ஜோடியாக ‘ஒஸ்தி’ படத்தில் நடித்தார்.
தமிழில் அதன் பிறகு சரியான வாய்ப்பு இல்லாததால் தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து நடித்து வந்தார். சமீப காலமாக தெலுங்கிலும் பட வாய்ப்பு குறைந்து விட்டது.
இந்நிலையில், நேற்று நள்ளிரவு ஒரு படத்தை ட்விட்டரில் பகிர்ந்து எனக்கு நிச்சயதார்த்தம் நடந்து விட்டது. இவர் தான் ஜோ. எனது வருங்கால கணவர். ஒருவணிக பள்ளியில் சந்தித்துக்கொண்டோம். 2 ஆண்டுகளாக காதலிக்கிறோம். இன்னும் திருமணநாள் முடிவு செய்யப்படவில்லை என்று பதிவு செய்திருக்கிறார்.
SHARE