பிக் பாஸ் 6ம் சீசனில் முக்கிய போட்டியாளராக இருந்தவர் விக்ரமன். அஸீம் மற்றும் விக்ரமன் இடையே பிக் பாஸில் இருந்த பிரச்சனை பெரிய அளவில் பேசப்பட்டது. ஆனால் இறுதியில் அஸீம் தான் டைட்டில் ஜெயித்தார், விக்ரமனுக்கு இரண்டாம் இடம் தான் கிடைத்தது.
சில மாதங்களுக்கு முன்பு கிருபா முனுசாமி என்ற பெண் வழக்கறிஞர் விக்ரமன் மீது புகார் கூறி இருந்தார். காதலித்துவிட்டு தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டார் என புகார் அளித்து இருந்தார்.
வழக்கு பதிவு
இந்த புகார் தொடர்பாக பல மாதங்கள் கழித்து தற்போது 13 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
SC/ST வன்கொடுமை தடுப்பு சட்டம், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட 13 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.