திருமணம் முடிந்த அடுத்த ஆண்டே உலகக்கோப்பையை கைப்பற்றிய கேப்டன்கள்!

111

 

இதுவரை உலகக்கோப்பையை கைப்பற்றிய கேப்டன்களில் 4 பேர் திருமணம் முடிந்த அடுத்த ஆண்டே வெற்றி பெற்றுள்ளனர்.

பேட் கம்மின்ஸ் தலைமையிலான அவுஸ்திரேலிய அணி 6வது உலகக்கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தது. அதிலும் குறிப்பாக, ஒரு பந்துவீச்சாளர் கேப்டனாக செயல்பட்டு அணிக்கு கோப்பையை பெற்றுத் தந்துள்ளார்.

கம்மின்ஸுக்கு கடந்த ஆண்டில் திருமணம் நடந்தது. அதனைத் தொடர்ந்து அடுத்த ஆண்டில் உலகக்கோப்பையை வென்றுள்ளார்.

இதில் சுவாரசியமான விடயம் என்னவென்றால், இதற்கு முன்பு உலகக்கோப்பையை வென்ற சில கேப்டன்களும் அதற்கு முந்தைய ஆண்டில் திருமணம் செய்திருந்தனர் என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கு இருமுறை உலகக்கோப்பையை பெற்றுத் தந்த ரிக்கி பாண்டிங்குக்கு 2002ஆம் ஆண்டில் திருமணம் நடந்தது. அதனைத் தொடர்ந்து 2003ஆம் ஆண்டில் அவுஸ்திரேலிய அணி உலகக்கோப்பையை கைப்பற்றியது.

2010ஆம் ஆண்டில் மகேந்திர சிங் தோனிக்கு திருமணம் நடந்தது. அடுத்த ஆண்டு அவரது தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்றது.

இயான் மோர்கன் 2018ஆம் ஆண்டில் திருமணம் செய்தார். அடுத்த ஆண்டில் இங்கிலாந்து முதல் உலகக்கோப்பை சாம்பியன் ஆனது.

SHARE