திருமலை இரகசிய தடுப்பு முகாம், நிலத்தின் கீழ் சிறை – விசாரணைக்கு உத்தரவு

270
திருகோணமலை கடற்படை தளத்திலுள்ள நிலத்தின்கீழான இரகசியதடுப்பு முகாம்களில்  மனித எலும்புக் கூடுகள் காணப்பட்டது.

இது குறித்து  விசாரணைகளை முன்னெடுக்குமாறு குற்றப்புலனாய்வு பிரிவினரிற்கு  கொழும்பு பிரதான நீதவான் ஜிகான் பிலப்பிட்டிய உத்தரவிட்டுள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் காணமற்போனோர் குறித்து விசாரணைசெய்யும் சர்வதேச குழுவொன்று அங்கு சென்றவேளையே அவர்கள் எலும்புக்கூடுகளை பார்த்துள்ளனர்.

இதேவேளை குறிப்பிட்ட நிலத்தின்கீழான சிறைச்சாலையில் 6021 என்ற இலக்கத்தை கொண்ட டொல்பின் மிட்சுபிசி ரக வாகனத்தை தாங்கள் கண்டுபிடித்துள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட வாகனம் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட வேளை அந்த வாகனம் கொழும்பு கொட்டாஞ்சேனையை சேர்ந்த ரீட் என்பவரிற்கு சொந்தமானது எனவும் அது களவாளடப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளதாகவும் குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

11 பேர் கடத்தப்பட்டு அங்கு தடுத்துவைக்கப்பட்டிருந்தமையும் விசாரணைகளின்போது தெரியவந்துள்ளதாகவும், 2015 ஏப்பிரல் 22 ம் திகதி குறிப்பிட்ட நிலத்தின்கீழான சிறைச்சாலை மூடப்பட்டுவிட்தாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE