திருமலை தோப்பூர் கிணற்றிலிருந்து குழந்தையின் சடலம் மீட்பு

257

weil

திருகோணமலை தோப்பூர் தங்கபுரம் பகுதியில் குழந்தையொன்று கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளது.

இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஒன்றரை வயது ஆண் குழந்தையொன்றின் சடலமே கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

சடலம் தோப்பூர் பிரதேச வைத்தியசாலையில் தற்போது வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகைளை சம்பூர் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.weil

 

SHARE