திருகோணமலை, சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீலாங்கேணி பகுதியில் நான்கு வயதுச் சிறுமியின் சடலமொன்று, நேற்று வியாழக்கிழமை (08) மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கண்டெடுக்கப்பட்ட சடலம், நல்லூர்-நீலாங்கேணி பகுதியைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் அஜந்தா எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று காலை 9 மணியளவில், வீட்டிலிருந்த சிறுமி, காணாமல் போயுள்ளதாகத் தெரியவந்ததையடுத்து தேடுதலில் ஈடுபட்ட கிராமமக்கள், காட்டுப்பகுதியில் புதைக்கப்பட்ட நிலையில் சிறுமியின் சடலத்தைக் கண்டு, பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை சம்பூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பூர் சிறுமி கொலை தொடர்பில் 16வயது இளைஞன் கைது
திருகோணமலை, சம்பூரில் இடம்பெற்ற சிறுமியின் கொலை தொடர்பில் 16 வயதான இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சிறுமி நேற்று காட்டுப் பகுதி ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டார்.
இந்தநிலையில் கொலை என்று சந்தேகிக்கப்படும் இந்த சம்பவம் தொடர்பில் தேடப்பட்டுவந்த 16வயதான ஒருவரே கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காட்டுப் பகுதியில் ஒழிந்திருந்த நிலையிலேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.