(டினேஸ்)
திருமலை மாவட்ட கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட உறவுகளை தேடியலையும் சங்கத்தினரினால் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு உவர்மலை வீதியில் அமைந்துள்ள போராட்ட மையத்தில் மிகவும் உணர்வுபூர்வமாக அனுஸ்டிப்பட்டது.
இச்சங்கத்தின் தலைவி நாகேந்திரன் ஆஷா தலைமையில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வானது முதலில் “களச்சாவாலே கால காலம் வாழும் வீரர்களாம்” ஆத்மா சாந்தியடைய வேண்டி இறைபூஜையுடன் ஆரம்பிக்கப்பட்டு மாவீர்ர்களுக்கான ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சிலி செலுத்தப்பட்டது அத்துடன் வீர வரலாறு காணும் மாவீர்ர்களின் நினைவின் பேரில் 30 க்கு மேற்பட்ட போராளிகள் குடும்பத்திற்கும் காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கும் என தென்னம்மரக் கன்றுகள் வழங்கு வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





