பிக் பாஸ் ஷோ என்றால் போட்டியாளர்களுக்கு நடுவில் வாக்குவாதம், சண்டை ஆகியவை வருவது வழக்கமான ஒன்று தான்.
தற்போது நடந்து வரும் பிக் பாஸ் 7ம் சீசனில் சில சண்டைகள் எலிமீறி செல்வது ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக தினேஷ் மற்றும் விசித்ரா ஆகியோர் சண்டை நீண்ட காலமாக நடந்து வருகிறது. இருவரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி கமலிடம் புகார் சொல்லி வருகிறார்கள்.
ரச்சிதா.. திரும்ப வந்துடாத
இந்நிலையில் தற்போது தினேஷ் உடன் சண்டைபோட்டுவிட்டு அவரை பற்றி திட்டிய விசித்ரா கேமரா முன் நின்று கோபமாக பேசிக்கொண்டிருந்தார்.
“இங்கே இவருடன் ஹவுஸ் மேட் ஆகவே இருக்க முடியல, இவர்கூட குடித்தனம் எப்படி பண்ணுவாங்க, விட்டுட்டு ஓட வேண்டியது தான். திரும்பி கிரிம்பி வந்துடாதமா தாயே” என ரச்சிதாவிடம் சொல்வது போல கேமராவில் கூறி இருக்கிறார் விசித்ரா.
விசித்ராவின் உண்மை முகம் இதுதான் என சொல்லி நெட்டிசன்கள் அவரை விமர்சித்து வருகின்றனர்.