ஆரோக்கியத்திற்கு தேவை நல்ல உணவு, நல்ல உணவுகள் பசியை தூண்டும். ஆனால் சில உணவுகள் அதிகரிக்கச் செய்யும். இதனால் உடல் பருமன் முதல் இதய நோய் வரை தாக்கப்படலாம்.
பசியை தூண்டிவிடுவதற்கும், பசியை அதிகப்படுத்துவதற்கும் வித்தியாசம் உள்ளது. பசியை தூண்டும் மோர், பழச் சாறுகள், புதினா, கருவேப்பிலை உடலுக்கு நல்லது.
ஆனால் சில உணவுகள் உடல் வளர்சிதை மாற்றத்தில் மாறுபட்டை உண்டாக்கி அதிகப்பசியை உண்டாக்கிவிடும். இதனால் உடல் பருமன், சர்க்கரை வியாதி ஆகியவை உண்டாகும். அவ்வாறான உணவுகளைப் பற்றி காண்போம்.
ஃப்ரெஞ்ச் ஃப்ரை:
ஃப்ரெஞ்ச் ஃப்ரை என உருளைக் கிழங்கில் பேக்கிங்க் செய்யப்பட்டு தரப்படும் இந்த உணவுகள் பசியை அதிகப்படுத்திவிடும். உங்களுக்கு அதுபோலவே சாப்பிட ஆசையென்றால் சர்க்கரை வள்ளிக் கிழங்கில் செய்து உண்ணலாம்.
வெள்ளை பிரட்:
வெள்ளை மைதாவில் செய்யப்படும் பிரட் உங்கள் பசித்தன்மையை அதிகபப்டுத்திவிடும். உடல் பருமனுக்கும், சர்க்கரை வியாதிக்கும் இது முக்கிய காரணங்கள்.
பச்சரிசி:
அரிசி வகைகளும் குறிப்பாக பச்சரிசி கூர்தீட்டப்பட்டது. இது உடலுக்கு நல்லதல்ல. அது தவிர்த்து பசியை அதிகம் ஏற்படுத்தும்.
சோடா:
சோடா பானங்களும் உங்கள் வயிறு நிரம்பிய உணர்வை தராது. பசியை ஏற்படுத்தும். இவை உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கக் கூடியவை.
செயற்கை பழச் சாறுகள்:
செயற்கை பழச் சாறுகள் என்பது மாம்பழம், ஆரஞ்சு என பழங்களின் வாசனை கொண்ட ரசாயனப் பொருட்களை சேர்ப்பதால் அவை உடலில் வளர்சிதை மாற்றத்தில் மாற்றத்தை உண்டுபண்ணும். அதோடு ஒழுங்கற்ற பசியை உண்டாக்கி, உடல் நலத்திற்கு பாதிப்பை உண்டாக்கும்.
– See more at: http://www.manithan.com/news/20161228123851#sthash.dtKlev17.dpuf