திருஷ்டி கழிக்கும் பூசணிக்காயில் இவ்வளவு நன்மைகளா?

266

காய்கறி வகைச் சேர்ந்த பூசணிக்காய் நிறைய மருத்துவ குணங்களை உள்ளடக்கி உள்ளது.இதில் விட்டமின்கள் A ,B, மினரல்ஸ் என்னும் தாது உப்புகள், கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், சிங்க், குக்கர் பிடோசின்ஸ், லினோனெலிக் அமிலம் போன்ற சத்துகள் அடங்கி உள்ளன.

  • இதயம் பலவீனமாக இருப்பவர்கள், வெண்பூசணிக்காயின் சாறு 30ml அளவு எடுத்து அதனுடன், ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து சாப்பிட்டால் இதயம் பலமாகும்.
  • பூசணிக்காயின் சாறு 120ml அளவு எடுத்து அதனுடன் ஒரு தேக்கரண்டி அளவு தேனும், தேவையான அளவு சர்க்கரையும் கலந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரகத்தில் ஏற்படும் ரத்தம் கலந்த சிறுநீர் வெளியேற்றம் மற்றும் சிறுநீரகத்தில் உண்டாகும் நோய்கள் போன்றவை நிவர்த்தியாகும்.
  • பூசணிக்காய் சாறு 30ml எடுத்து அதை மட்டும் தினமும் சாப்பிட்டு வந்தால் தொடர்ந்த இருமல், நெஞ்சுச்சளி, ரத்தக்கசிவு போன்றவற்றை குணமாக்கி நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது.

625.0.560.320.500.400.194.800.668.160.90

  • பூசணிக்காயை வேகவைத்து, நன்றாக வெந்த பின் அதன் சாற்றை எடுத்து 60ml தயாரித்து அதனுடன், சிறிது கற்கண்டு சேர்த்து தினமும் 2-3 வேளை சாப்பிட்டு வந்தால் கல்லீரல் பாதிப்பால் உண்டாகும் மஞ்சள் காமாலை நோய் விரைவில் குணமாகும்.
  • உடல் வலிமை பெறுவதற்கு பூசணிக்காய் விதைகளை காய வைத்து, அதை நன்கு அரைத்து பொடி செய்து, தினமும் ஒரு தேக்கரண்டி அளவு பாலில் கலந்து சாப்பிட்டு வர வேண்டும்.
  • பூசணிக்காய் சாறு எடுத்து 30ml முதல் 60 ml வரை வைத்துக்கொண்டு இதில் தேன் ஒரு தேக்கரண்டி சேர்த்து தினசரி கொடுத்து வந்தால், ஒல்லியான சிறுவர்களுக்கு சதைப்பிடிப்பு ஏற்படுத்தி நல்ல அழகான ஆரோக்கியமான தோற்றத்தை உண்டாக்கும்.
  • பூசணிக்காய் சாற்றுடன் ஒரு தேக்கரண்டி நெல்லிச்சாறு மற்றும் எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் நுரையீரல் பிரச்சனைகள் தீரும்.
SHARE