திரு. சம்பந்தன் ஐயா அவர்களை, அவரால் #தேசியத்தலைவர் என புகழப்பட்ட மஹிந்த ராஜபகஷ்ச சந்தித்து நலம் விசாரித்த கண்கொள்ளா காட்சி.

180

திடீர்_சுகயீனம்_காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வீடு திரும்பிய எதிர்க் கட்சி தலைவர் திரு. சம்பந்தன் ஐயா அவர்களை, அவரால் #தேசியத்தலைவர் என புகழப்பட்ட மஹிந்த ராஜபகஷ்ச சந்தித்து நலம் விசாரித்த கண்கொள்ளா காட்சி.

கடந்த சில நாட்களாக சுகயீனம் காரணமாக கொழும்பு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தமிழ் தேசிய  கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா. சம்பந்தன் அவர்களை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ அவர்களும் இன்று (25.12.2017) வைத்தியசாலைக்கு சென்று நலம் விசாரித்தனர்.  கடந்த வியாழக்கிழமை முதல் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த எதிர்க்கட்சி தலைவர் அவர்கள் இன்று வீடு திரும்பினார்.

 

SHARE