இந்த ஆர்ப்பாட்டம் இன்று காலை வேளையில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும். சுமார் 1000 மாணவர்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
குறித்த போராட்டம் விகாரமா தேவி பூங்காவிலிருந்து பல்கலைக்கழக மானியங்கள் வரை செல்கின்றது. இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்கள்,
“எமது பல்கலைக்கழகம் கடந்த சில காலமாக மூடப்பட்டிருக்கின்றது. மூடப்பட்ட பல்கலைக்கழகத்தை திறப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது பல்கலைக்கழக வளாகத்திற்குள் சி.சி.டி.வி பொருத்தப்பட்டுள்ளது. ஆதலால் எமது பல்கலைக்கழகம் ஒரு சிறைச்சாலையைப் போல் எமக்குத் தோன்றுகின்றது.
மேலும் திறந்த பல்கலைக்கழக கல்வி முறையை விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுக்கின்றது. தனியார் பல்கலைக்கழகங்களுக்கு அரசு கொடுக்கும் வசதிகளை எமக்கும் வழங்க வேண்டும். எமக்கு எமது உரிமைகளைப் பெற்றுத்தர வேண்டும்.” என்ற கோரிக்கைகளை முன் வைத்தனர்.
இதற்கு முன்னரும் திறந்த பல்கலைக்கழக மாணவர்கள் பல போராட்டங்களை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.