திலக் மாரப்பனவின் கருத்து பாராட்டுக்குரியது – மஹிந்த ராஜபக்ஸ

288

சட்டம் ஒழுங்கு அமைச்சர் திலக் மாரப்பனவின் கருத்து பாரட்டுக்குரியது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

அவன்ட் கார்ட் சம்பவம் குறித்து அமைச்சரின் கருத்து வரவேற்கப்பட வேண்டியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹம்பாந்தோட்டை கடிகமுவ பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

திலக் மாரப்பன கௌரவமான சட்டத்தரணி எனவும் அவரது நிலைப்பாட்டை வரவேற்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

2002ம் அண்டு மிலேனியம் சிட்டி சம்பவத்தைப் போன்று காவல்துறையினர் தங்களது புகழை பரப்பிக் கொள்ளும் நோக்கில் அவன்ட் கார்ட் சம்பவத்திற்கு கூடுதல் பிரச்சாரத்தை வழங்கியதாக திலக் மாரப்பன தெரிவித்திருந்தார்.

இதேவிதமாக தமக்கு எதிரான விசாரணைகளையும் கருதுவதாக மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

சில தரப்பினர் தமக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை சுமத்தி தங்களது பிரபல்யத்தை அதிகரித்துக்கொள்ள முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

SHARE