திலக் மாரப்பனவிற்காக குரல் கொடுக்கும் மஹிந்த

282

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, திலக் மாரப்பனவிற்காக குரல் கொடுத்து வருக்கின்றார்.

உண்மையை நிலைமையை எடுத்துரைத்த காரணத்தினால் திலக் மாரப்பன தனது அமைச்சுப் பதவியை இழக்க நேரிட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சட்டம் ஒழுங்கு தொடர்பான முன்னாள் அமைச்சர் மாரப்பன, நேர்மை காரணமாக உண்மை சொன்னதாகவும் அதனால் பதவியை இழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மனச்சாட்சிக்கு விரோதமின்றி மாரப்பன அவன்ட் கார்ட் தொடர்பில் கருத்து வெளியிட்டு சர்ச்சையில் மாட்டிக்கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.

திலக் மாரப்பன மிக நேர்மையான நல்ல மனிதர் எனவும், சிறந்த கனவான் எனவும் மஹிந்த ராஜபக்ஸ புகழாரம் சூட்டியுள்ளார்.

அவன்ட் கார்ட் சம்பவம் தொடர்பில் நீதி அமைச்சரும், சட்டம் ஒழுங்கு அமைச்சரும் பிரச்சினையில்லை என கூறியுள்ளார்கள் எனவும், வேறு பிரச்சினைகள் எதுவும் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE